Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

வெளிநாட்டுப் பாலுக்கு இந்தியாவில் அனுமதியில்லை: பியூஷ் கோயல்

வெளிநாட்டுப் பாலுக்கு இந்தியாவில் அனுமதியில்லை: பியூஷ் கோயல்

இந்திய மக்களின் மத உணர்வுகளை மதிக்கும் வகையில், இதுபோன்ற பால் பொருட்கள் இந்தியாவிற்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

பகிரவும் WhatsApp Facebook

வெளிநாட்டுப் பாலுக்கு இந்தியாவில் அனுமதியில்லை என மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள கிரோடி மால் கல்லூரியில் நேற்று இளம் தலைவர்களுடன் உரையாடல் மன்றம் என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் பியூஷ் கோயல் மாணவர்களிடையே பேசியதாவது: 

வெளிநாடுகளுடனான எந்தவொரு வர்த்தக ஒப்பந்தத்திலும் இந்தியாவின் பால் துறையைத் திறந்துவிட மாட்டோம். மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களை நாட்டிற்குள் அனுமதிக்க மாட்டோம்.

நாட்டின் முக்கியமான விஷயங்களில் அரசு எப்போதும் சமரசம் செய்துகொள்வதில்லை சர்வதேச வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின்போது நமது விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு குறு தொழில் நிறுவனங்களின் வாழ்வாதாரத்தை மத்திய அரசு தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. குறிப்பாக, வெளிநாடுகளில் சீஸ் போன்ற பால் உணவுகளைத் தயாரிக்க இளம் கன்றுகளின் பாகங்களிலிருந்து எடுக்கப்படும் திரவங்களையும், விலங்குக் கழிவுத் தீவனங்களையும் பயன்படுத்துகின்றனர்.

இந்திய மக்களின் மத உணர்வுகளை மதிக்கும் வகையில், இதுபோன்ற பால் பொருட்கள் இந்தியாவிற்குள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வெளிநாடுகளில் இருந்து மலிவான மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் உள்ளே வந்தால், அது இந்திய விவசாயிகளின் வருமானத்தைப் பாதிக்கும். 

எனவே, மரபணு மாற்றப்பட்ட பயிர்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை. அதேநேரம் ஜவுளி, மருந்துகள், நகைகள் போன்ற துறைகளில் இந்தியப் பொருட்களுக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் குறைந்த வரிகள் மற்றும் அதிக முன்னுரிமை கிடைக்க அரசு முயற்சித்து வருகிறது. 2026-27 நிதியாண்டில் ஏற்றுமதியில் 1 டிரில்லியன் டாலரை எட்டுவதே இலக்கு. இதில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்களில் ஏற்றுமதி 14 சதவீதம் உயர்ந்து 480 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.

மேலும், சுரங்கம் தோண்டும் பெரிய இயந்திரங்களை வழங்க சீனா மறுத்தாலும் இந்தியா யாரிடமும் கையேந்தாமல் உள்நாட்டிலேயே அதைத் தயாரிக்கும். விமானப் போக்குவரத்தை அதிகரிக்க ஏர்பஸ், போயிங் போன்ற நிறுவனங்களுடன் அரசு பேசி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முந்தைய செய்தி
பிஎல்எஸ் பாலிமர்ஸ் பங்குகள் 65% உயர்வுடன் அறிமுகம்
அடுத்த செய்தி
EAAA இந்தியா பங்குகளில் ரூ.316 கோடி முதலீடு

தொடர்புடைய செய்திகள்